kalaignar Women’s Entitlement Scheme Ceremony: Minister Sivashankar inaugurates in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 15.09.2023 அன்று நடைபெறவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2023 அன்று தொடங்கி வைக்க உள்ளார். அதேநாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இத்திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்க உள்ளார். சுமார் 2,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய அழைப்புக் கடிதங்கள் ஒவ்வொரு பயனாளியின் வீட்டிற்கும் சென்று சேரும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்க பட உள்ளது என அதில் கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.