Kalaingar Centenary Celebration : Special Patta Camp: Perambalur Collector Info!
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜுன் மாதம் முதல் 2024 ஜுன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டு மாவட்டந்தோறும் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 3 வட்டத்திற்கு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குன்னம் வட்டத்திற்கு, குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா முகாம்கள் 18.08.2023 அன்று நடைபெறவுள்ளது.
மேற்படி சிறப்பு பட்டா முகாமில் வீட்டுமனைப் பட்டா மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்கள், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான மனுக்கள், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். இந்த சிறப்பு பட்டா முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.