Kalpana Chawla Award for Women Who Saved Reservoirs in Saree: Collector V. Shantha Praise

பெரம்பலூர் அருகே நீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்களை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் “கல்பனா சாவ்லா ” விருது வழங்கியதை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக கலெக்டர் வே.சாந்தாவை, அவரது அப்பெண்கள் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 6ந் தேதி சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்றனர். அங்கு வடிகால் பகுதியில் இறங்கிய 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நீரில் தத்தளித்து கொண்டு இருந்த 2 இளைஞர்களை அங்கு துணிகளை துவைத்து கொண்டிருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி ஆகிய மூன்று பெண்களும் தாங்கள் வைத்திருந்த இருந்த சேலைகளை வீசி காப்பாற்றினர்.

இந்த துணிகர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க கலெக்டர் சாந்தா பரிந்துரை பேரில், கல்பனா சாவ்லா விருது இப்பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இளைஞர்களை காப்பாற்றிய பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகஸ்ட் 15-ந் தேதி சென்னையில் நடந்த 74வது சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலக கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள் மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோர்களுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான தங்கப்பதக்கங்கள், காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வே.சாந்தாவை, செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவரும் நேரில் சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட்ட விருது, தங்கப்பதக்கங்கள், காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!