Kamaraj’s 121st birthday; Honored by garlanding in Perambalur!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணை திறந்த காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் நாடார் உறவின் முறை சங்கத்தின் பொதுச்செயலாளர் தினகர் தலைமையில், சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் சங்கத்தின் பொருளாளர் பால்ராஜ், இளைஞரணி தலைவர் வரதராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபு மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையிலும், முன்னதாக விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
விளம்பரம்: