Karalmarks Two Century Days Celebrate in Perambalur

மாமேதை காரல் மார்க்ஸ் 1818 மே 5ஆம் தேதி அன்று பிறந்தார். அவரது 200 வது ஆண்டு பிறந்தநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
மார்க்சைபற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் மாநாடுகள் கருத்தரங்குகள் மற்றும் நூல் வெளியீடுகள் என இருநூற்றாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்றது.
மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் நேற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது. துறைமங்கலத்திலுள்ள மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர்கள் எஸ்.அகஸ்டின் ஆர்.ரெங்கராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
வட்ட தலைவர் கே.கண்ணன், வட்ட பொருளாளர் வி.தமிழ்செல்வன், மற்றும் நிர்வாகிகள் எம்.பன்னீர்செல்வம், பி.பாலகிருஷ்ணன், எஸ்.நல்லுசாமி, எஸ்.காசிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.