Karthikai Amavasai (Black Moon): Namakkal Anjaneyar Swamy, special abishekam, decoration
கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதில் மாதம்தோறும் ஒவ்வொரு தமிழ் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிகளில் சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
அதேபோல் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10:00 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் மற்றும் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலைகள் அணிடவித்து சொர்ணாபிசேகம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சுவாமிக்கு முத்திங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.