Kazi can apply for appointment: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக் கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
இந்த தகுதியுடைவர்கள், விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 24.01.2022-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கூடுதல் விவரங்களை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.