Keelapuliur Pachaiyamman Sametha Mannatha Swami Temple Maha Kumbabhishekam ; Pooja starts

பெரம்பலூர் அருகே உள்ள கீழப்புலியூர் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் மகா கும்பிசேகம் 10-ந்தேதி நடக்கிறது. இதனைஒட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூரில் புகழ்பெற்ற பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி விநாயகர், பூங்காயி அம்மன் மற்றும் பரிவாரதெய்வங்கள் சன்னதிகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன் மகா கும்பாபிசேக பெருவிழா 10-ந்தேதி காலை 8.40 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடக்கிறது.
மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று காலை விக்னேஸ்வரபூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சமி ஹோம், துர்காதேவி மற்றும் நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை ஆகியவை நடந்தன.
மாலை வினாயகர் வழிபாடு, மகா வாஸ்துசாந்தி, ரக்ஷோக்ன ஹோமம் மற்றும் சக்திஅழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாளை வெள்ளிக்கிழமை காலை 9மணிக்கு புனித மண்எடுத்துக்கொண்டு ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும், மாலை 4.35 மணிக்கு மேல் வருணபூஜை, அங்குரார்ப்பணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-வது கால யாகசாலை பூஜைகளும், 96 வகையான மூலிகளைக்கொண்டு திரவிய யாகமும் நடக்கிறது.
மாலை 4மணிக்கு கணபதிபூஜை, வருண ஆராதனை, பஞ்சகவ்ய சிவ பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் 3-வது கால யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன.
10-ந்தேதி காலை 4.30 மணிக்கு நான்காம் கால யாகசாலைபூஜைகள், மகாபூர்ணாகுதி, யாத்ராதானம் நடக்கிறது.
காலை 8.40 மணிக்கு பச்சையம்மன் சமேத மன்னாதசுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கும் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுரங்களுக்கு மகா கும்பாபிசேகமும் நடக்கிறது.
காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் பச்சையம்மன் சமேத மன்னாதசுவாமி மூலவர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கும் மகா கும்பாபிசேகமும் நடக்கிறது.
மகா கும்பாபிசேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் ஜெயச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிசேக பெருவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டுதாரர்கள், கீழப்புலியூர் மற்றும் கே.புதூர் கிராம பொதுமக்கள், கிராம பிரமுகர்கள் செய்துவருகின்றனர்.