vakkom-murder.caseகேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டப்பகலில் வாலிபர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவரிகளை இருவர் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற் றிங்கல்வக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மகன் ஷபீர் (26). இவர் ஆலங்கோட்டிலுள்ள மீன் மொத்த விற்பனை மையத்தில் கமிஷன் ஏஜெண்டாக இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றிங்கல் பகுதியில் நடந்த ஒரு கோயில் விழாவில் யானையின் வாலை பிடித்து இழுத்ததாக கூறி ஷபீருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட் டது.

இது தொடர்பாக எதிர் கோஷ்டியை சேர்ந்த ஒருவரின் வீட்டை ஷபீர் தலைமையிலான ஒரு கும்பல் சூறையாடினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.

அதற்கு பின்னர் ஷபீர் தனது நண்பர் உண்ணிகிருஷ்ணனுடன் வக்கம் ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 பேர் கும்பல் அவர்களை வழி ம றித்தது. இருவரையும் பைக்கிலிருந்து கீழே தள்ளிய பின்னர் அவர்களை தடியால் சரமாரியாக தாக்கியது. பின்னர் அக்கும்பல் அங் கிருந்து தப்பிச் சென் றது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷபீர், உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஷபீர் இறந்தார்.

இதனிடையே ஷபீர் மற்றும் அவர் நண்பர் மீது நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது கைபேசியில் வீடியோபதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அதனை ஆதரமாக கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியிலுள்ள கடக்காவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இணைப்பில் இருந்த செல்போன் எண்களை கொண்டு கேரளா போலீசார் மேற்கொண்ட முதகட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் ஷபீர் கொலை செய்யப்பட்டதும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் திருவனந்தபுரம்,வளையவீடு, மார்த்தாண்டகுட்டி சமரக்கம்,வைக்கம் கிராமத்தை சேர்ந்த பிரசன்னன் மகன்கள் சந்தோஷ்(23), சதீஷ்குமார்(21) என்பதும், இவர்கள்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து பெரம்பலூர் வந்த கேரளா போலீசார் பெரம்பலூர் போலீசார் உதவியுடன் சந்தோஷையும், அவரது சகோதரர் சதீஷ்குமாரையும் கைது செய்து கேரளா அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பெரம்பலூர் இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருந்தது பொது மக்கள் மதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!