Kerala state cancels ceremonies for one year: State Government Announcement

கேரளமாநிலத்தில் ஒரு வருடத்துக்கு விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்த மாநிலஅரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி பெய்த கனமழையால் பல லட்சகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து 2,787 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் காணாமல் போயினர்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கி உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக ஒவ்வொரு நாட்டில் உள்ள மலையாளிகளை சந்திக்கும் விதமாக அமைச்சர்கள் அடங்கிய குழு நேரில் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்நிலையில், ஒரு வருடத்துக்கு கேரளாவில் நடைபெறவுள்ள அனைத்து விழாக்களையும் ரத்து செய்வதாக கேரள அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

இதனால் கேரள சர்வதேச திரைப்பட விழா மற்றும் இளைஞர் விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!