Kids request to The Collector, for renovation of the children’s park in Perambalur
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் ஆ.ராஜாவின் முயற்சியால், பொழுது அம்சம் இல்லாததால் பொதுமக்கள் குழந்தைகள் ரிலாக்ஸ் ஆக சிறுவர் பூங்கா அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

முன்னாள் ஆட்சியர்களாக இருந்த தரேஸ் அஹமது, நந்தக்குமார் ஆகியோரின் முயற்சியால் மேலும், விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்களை கூடுதல் நிதி ஒதுக்கி குழந்தைகள் அறிவியலை விளையாட்டாக கற்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதனால், காலை, மாலை வேளை நேரங்களில் பெரியவர்கள் நடைபயிற்சியும், குழந்தைகள், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, ஒலி மற்றும் எதிரொலி அலைகள் தொடர்பான விளையாட்டுகள், இலகுவாக பளு தூக்குதல், பார்வையில் தோற்ற மாற்றம், கோள்கள் இயக்கம் தொடர்பான உபகரணங்களை பள்ளி மாணவர்கள் குழந்தைகள், ஆனால், கடந்த சில வருடங்களாக சேதம் அடையும் விளையாட்டு மற்றும் அறிவியல் உபகரணங்களை புதுப்பித்து தராததால் அங்கு கட்டணம் செலுத்தி விளையாட வரும் மாணவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி உள்ளது. ஆகையால், சேதமடைந்த விளையாட்டு மற்றும் அறிவியல் உபகரணங்களை புதிதாகவும், பழுதாவைகளை சீர் செய்தும் தர வேண்டும் என சிறார்கள் பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.