பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக அ.மேட்டூரை சேர்ந்த பாலசந்திரன் போட்டியிடுகிறார். அவரது வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ஈஸ்வரன் பேசியதாவது:
திமுக, அதிமுக கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நாம் பண்பாடு மிக்கவார்கள், நேர்மையானவர்கள், எனவே, அந்த வெறுப்பு ஓட்டுக்களை நாம் பெற பாடுபட வேண்டும்.
கொங்கு மண்டலத்தில் 2ம் இடம்
கொ.ம.தே.க கடந்த தேர்தல்களின் போது திமுக வை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தில் உள்ளோம். மற்ற கட்சிகளுக்கான வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக இருக்கிறோம்.
தற்போது 72 இடங்களில் போட்டி யிடுகிறோம். 40 இடங்களில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வோம். 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயம் வெற்றி அடைவோம்.
வயதானவாகளை பார்த்து வெள்ளத்தில் நடந்து வரவில்லை என்றால் எப்படி வருவார்கள். அந்த ஜெயலலிதாவிற்கோ 68 வயதாகிறது. கருணாநிதிக்கே 94 வயதாகிறது. அவர்களின் வயோதிகத்தை குறை கூற முடியாது. எப்படி அவர்களால் நடக்க முடியும். ஸ்டாலின் தனது அப்பாவை முதலமைச்சராக்க பாடுபடுகிறார். பிரேமலதாவோ கணவரை முலமைச்சராக்க பாடுபடுகிறார். ராமதாசோ அவரது மகனை முதலமைச்சராக்க பாடுபடுகிறார்.
2 கட்சியில் எந்தக் கட்சி நல்லக் கட்சி?
திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே தங்களது சுயலாபத்திற்காகே மணல், இயற்கை வளங்களை சுரண்டி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு யார் சரக்கு சப்ளை செய்வது என போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றன. இன்று மதுவை ஒழிக்கிறோம் என அறிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை கிராணைட் கொள்ளையில் இரண்டு கட்சிகளுக்குமே சமபங்கு உள்ளது. கரூரில் ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கலெக்டரோ பத்து லட்சம் தான் பறிமுதல் செய்துள்ளோம் என தெரிவிக்கிறார்.
பேங்கிலேயே ஒரு பணம் என்னும் மிசின்தான் உள்ளது. ஆனால் கரூரில் குடோனிலோ 27 மிசின்கள் இருந்துள்ளது. அதிமுக திமுக ஆட்சி வருவது மக்களுக்கு நல்லது செய்ய அல்ல, அவர்களிடம் ஆயிரமாயிரம் கோடிக்கணக்கான சொத்துக்களை பாதுகாக்கதான் என தெரிவித்த அவர், அதிமுக திமுக கட்சிகள் அவர்களிடம் உள்ள உண்மையான சொத்துப்பட்டியல் வெளியிட்டால் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான அளவு சேர்த்து வைத்து இருப்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும்,
மக்களுக்காக உழைக்கும், ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடுக்கு அடுத்ததாக பெரம்பலூரில் முதன்முறையாக போட்டியிடுகிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற செய்ய அமைப்பாளர்கள் பாடுபடவேண்டும் என பேசினார்.
மாவட்ட அமைப்பாளர்கள் பெருநிலா பூபாலன், மலையாளப்பட்டி சின்னத்தம்பி, தொழிலதிபர் பிரகதீஸ், கோவிந்தசாமி, மோகன்ராஜ் உள்பட எசனை – இரட்டைமலைசந்து, பூஞ்சோலை, அய்யர்பாளையம், கோரையாறு, கவுண்டர்பாளையம், வெட்டுவால்மேடு, பூமிதானம், மலையாளப்பட்டி, கொட்டாரகுன்று உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.