KMDK is fully supported for the wait of the farmers against the construction of power towers.

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் தமிழக அரசு அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் சார்பாக கொங்கு மண்டலத்தில் 8 இடங்களில் நடைபெறவிருக்கின்ற காத்திருப்பு போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.

கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கின்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மொத்தமாக 18 உயர் மின் அழுத்த கோபுர திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்த முயற்சிப்பதை அறிந்து வேதனைபடுகிறோம்.

ஒரு 10 ஏக்கர் நிலத்தின் நடுவில் மின் கோபுரங்கள் அமைந்தால் அமைக்கின்ற இடம் மட்டுமல்ல, 10 ஏக்கர் நிலமும் மதிப்பு இழந்து போகும். ஏழை விவசாயின் மொத்த நிலத்தையும் அபகரிக்கின்ற திட்டம் இது. இந்த திட்டத்தை நிலத்திற்கு அடியில் செயல்படுத்தினால் அதிகம் செலவாகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு புயல் வந்தால் அமைக்கின்ற அத்தனை கோபுரங்களும் தரையில் சாய்ந்துவிடும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் அதிகமாக பாதிக்கப்பட்டது மின் கம்பங்கள் தான். திருப்பி புதிய மின் கம்பங்கள் நடப்பட வேண்டுமென்பது ஒருபுறம். மின்சாரம் இல்லாமல் காலவரையின்றி மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு சொல்லி கொடுத்த பாடம் இது. புயல் வந்தால் இப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு பண செலவு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டும் விவசாயிகளை வற்புறுத்தி உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதை உடனே நிறுத்த வேண்டும். 17 -ஆம் தேதி நடக்கின்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிக்கின்றோம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!