KN Arun Nehru’s nomination form to contest for Perambalur MP constituency on behalf of DMK!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட இன்று விருப்பமனு கே.என்.அருண் நேரு அளித்தார். பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் 32 பேர் இன்று விருப்பமனு அளித்துள்ளனர்.

எம்.பி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது.இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மார்ச் 1ம்தேதி முதல் 7ம்தேதிக்குள் விருப்பமனுக்களைபூர்த்தி செய்து தலைமைக்கழகத்தில் சமர்பிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி முதல் நாளான இன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். மேலும் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று மட்டும் 32 பேர் விருப்பமனு அளிதுள்ளனர்.

இதில் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் திருச்சி வடக்குமாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் கே.வைரமணி, எம்.எல்.ஏக்கள் பெரம்பலூர் பிரபாகரன், லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கதிரவன், மற்றும் கே.என்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெரம்பலூர் மற்றும் திருச்சி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!