Kongu Maruthuvar community should be included in the list of Scheduled Castes at the Namakkal State Convention
நாமக்கல் : கொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கொங்கு மருத்துவர் நலச்சங்கத்தின் 8 வது மாநில மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் துரைசாமி, துணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் ஒன்றிய தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.
இதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசிற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைய நடவடிககை எடுக்கவேண்டும். ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவை பாழாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாலையில் கொங்கு மருத்தவர் சமூக மணமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் நாமக்கல் ஒன்றிய செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.