Krishnapuram Sri Madura Matric School Founder and Chairman V. Sekar passed away!
கடின உழைப்பால் உயர்ந்த மனிதரும், பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம், ஸ்ரீ மதுரா மெட்ரிக் பள்ளியின் தாளாளருமான வீ.சேகர் இன்று காலமானார். அவருக்கு பள்ளி நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பின்தங்கிய கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இவரது பள்ளியில், கிருஷ்ணாபுரம், தழுதாழை, அரும்பாவூர், தொண்டைமாந்துறை, விஜயபுரம், அய்யர்பாளையம், கோரையாறு, வெங்கலம், வெங்கனூர், வெண்பாவூர், வடகரை, நெய்க்குப்பை, வேப்பந்தட்டை, விசுவகுடி, முகமதுபட்டினம், பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்காக மாணவர்கள் பயின்று இன்று நல்ல வேலைவாய்ப்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.