Kumbabishekham festival in Maha Ganapathi temple at Pudunadavalur near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூரில் எழுந்தருளியுள்ள மஹா கணபதி, கைலாசநாதர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேசபெருமாள் மற்றும் மஹா மாரியம்மன், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, 18 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு ஜந்துகரத்தான் வழிபாடு, புன்யாகம், யாகசாலை பிரவேசம் திரவ்யாஹூதி பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் கணபதி வழிபாடு, சூர்யபூஜை, வேதபாராயணம், மூலமந்திர ஹோமம், திரவ்யாஹூதி ஆகிய சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு மங்கள இசையும், விக்னேஷ்வர பூஜையும் நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, சூர்யபூஜை, புன்யாகம், பிம்பசுத்தி மற்றும் தீபாராதனையும், 7.30 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீமஹா மாரியம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
9 முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இதில், பெரம்பலூர், அரணாரை, நொச்சியம், விளாமுத்தூர், செஞ்சேரி, புதுநடுவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜையும், சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.