பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மேலமாத்தூரில் நடந்தது. கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை அறிமுகப்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்ப்படுத்தப்பட்டு உள்ளது. ஏழை மக்களுக்காக அம்மா உணவகம், அம்மாகுடிநீர், அம்மாஉப்பு, அம்மா சிமெண்ட், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வெள்ளாடு, இப்படி எண்ணற்ற திட்டங்கள் திட்டங்கள் செயல்பந்தப்பட்டு உள்ளது அதிமுக அரசின் சாதனை சொல்லிக் கொண்டே போனால் 1 மாதமாகும்.
மீண்டும் அதிமுக அரசு அமையும் போது மது விலக்கு படிப்படியாக அமல்படுதப்படும், கச்சதீவு மீட்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் சொல்லாத திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வருவார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமுல்படுத்துவதற்கு முதல் கையெழுது போடுவேன் என்று கூறி உள்ளார். அப்படியென்றால் டாஸ்மாக் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவார்களா? திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது.
அக்குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் திரைப்படம் உள்பட ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தி நாட்டை கொள்ளை அடித்து உள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து உள்ளார். மக்களுக்காகவே வாழ்ந்து வருகிறார்.
தொலைநோக்கு திட்டமான 2023 விசன் திட்டம் செயல்படுத்தி வருகிறார். மேலும் தொழில் முதலீடுகளை பெற்று தொழில் துவங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
கட்சியினர் தங்களது பகுதிகளில் அதிக அளவில் இரட்டை இலை சின்னங்களை வரைய வேண்டும் பூத் கமிட்டியினர் தங்களது தேர்தல் பணிகளை தோய்வின்றி பணியாற்ற வேண்டும் வாக்கு எண்ணியின் போது பூத் வாரியாக ஓட்டு கணக்கு எடுக்கப்பட்டும் அதிக வாக்குகளை பெற்று தரும் பூத்கமிட்டியினருக்கு பரிசு வழங்கப்படும்.
இத்தொகுதியல் ஜெயலலிதாவே போட்டியிடுவதாக கருதி அதிமுகவினர் அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரணை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், எம்.பிக்கள் சந்திரகாசி, மருதராஜா, எம்.எல்.ஏ.தமிழ்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.