Kunnam C. Rajendran elected as Perambalur District Panchayat Chairman; Muthamischelvi as vice president
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக்கு 7 திமுக உறுப்பினர்களும், 1 அதிமுக உறுப்பினரும் வெற்றி நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்து. தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடந்து. ஊராட்சித் தலைவர் பதவிக்கு குன்னம் சி.ராஜேந்திரனுக்கு மட்டும் முன்மொழியப்பட்டு இருந்து. வேறு எவரும் முன்மொழிய இல்லாத நிலையில், போட்டியின்றி ஒரு மனதாக திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் இன்று தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவித்தார். இதே போல துணைத் தலைவராக முத்தமிழ் செல்வி மதியழகன் தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத்தலைவருக்கு அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். திமுக உறுப்பினர்கள் டி.சி.பி பாலு, மகாதேவியெஜபால், கருணாநிதி, சித்ரா புகழேந்தி, அருள்செல்வி காட்டுராசா, மற்றும் அதிமுக உறுப்பினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். திமுக கட்சியினர் பரமேஸ்குமார், வக்கீல் ராஜேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பணிசிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர்.