Kunnam constituency DMK candidate Sivasankar collects votes with allied parties!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்ட மன்ற தொகுதியில் 2வது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று பீல்வாடி கிராமத்தில் இருந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தை துவங்கினார். பெண்கள் அவருக்கு ஆங்காங்கே, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர். ஊர் நுழைவு பகுதிகளில் வெடி வெடித்தும், மலர் மாலை அணவித்தும் பொதுமக்கள் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். சித்தளி, எழுமூர், ஆய்குடி, அசூர், வரகூர், அந்தூர், கல்லம்புதூர், பரவாய், சமத்துவபுரம், பழவராயநல்லூர், காருகுடி, ஆண்டிக்குரும்பலூர், சின்னபரவாய், வைத்தியநாதபுரம் ஆகிய கிராமங்களில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவின் தேர்தல் அறிக்கைகள், கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தார். அப்போது, ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி பிரசார பாடல்களுடன், மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் காலை முதல் மாலை வரை கொளுத்தும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்தது.