பெரம்பலூர் : குன்னம் சட்ட மன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக த.துரைராஜ் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று லப்பைக்குடிக்காடு மேற்கு மக்பரா அல் – ஜாமி ஆ பள்ளிவாசலில் கூட்டணி கட்யினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து பள்ளிவாசலில் இருந்து வெளிவந்த இஸ்லாமியர்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறியும், துண்டு அறிக்கைகளை வழங்கியும், வாக்காளர்களிடம் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடையும்படி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் வெங்கடாசலம், துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன், மற்றும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி பிரமுகர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் சுல்தான் மைதீன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராயல் சம்சுதீன் உட்பட திமுக மற்றும் தோழமை கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.