பெரம்பலூர் : பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் ஒதியம் பிரிவு சாலை பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட சுமார் 30 ஏக்கர் நிலத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றியுள்ள சுமார் ஆயிரம் 500 ஏக்கர் பரப்பளவில் கருவேலி தரங்கள் உள்பட ஏராளமான முட்செடிகள் முளைந்து வனம் போன்று காணப்படும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக முட்புதர்கள் காய்ந்து கருகி, காட்சி அளித்து வந்தது.
இந்நிலையில் சற்றுமுன் அந்த முட்புர்கள் திடீரென தீ பற்றி தீ மள,மளவென அனைத்து இடங்களிலும் பரவி அப்பகுதியிலுள்ள முட்புதர்கள் அனைத்தும் பயங்கரமாக எரிய தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வண்டிகள் சாலை தெரியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர், அரியலூர் பிரதான சாலையில் நிகழ்ந்த இந்த தீடீர் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.