Kunnam MLA R.T. Ramachandran, one lakh 12 thousand rupees funded to unreturened Kasi Yatra People
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, எறையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 56 பேர் கடந்த மாதம் 15ம் தேதி காசிக்கு யாத்திரை சென்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வந்தனர். அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்தவர்கள், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரனை தொடர்பு கொண்டு நிலையை தெரிவித்தனர். இதனையடுத்து அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை யாத்திரை சென்றவர்களின் மகன்களிடம் வழங்கி அவரது வங்கி கணக்கு அனுப்புமாறும் அவர்கள் மீண்டும் தமிழக வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியும் தெரிவித்தார்.