Kunnam MLA R.T.Ramachandran will meet with lightning strikes near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி இந்துமதி (வயது 29), அதே ஊரை சேர்ந்த சுந்தரராஜன் மகன் ராஜதுரை (வயது 26) ஆகிய இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், வெவ்வேறு இடங்களில் 3 நாட்களுக்கு முன்னர் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது மழை காற்றுடன் பெய்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்டட இடி மின்னல்கள், தனித்தனியாக இருவரையும் தாக்கியது.

இதை அறிந்த உறவினர்கள், அவர்களை பெரம்பலூரில் உள்ளஅரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இந்துமதியை அனுமதித்துள்ளதை அறிந்த பெரம்பலூர் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் அவரது குடும்பத்தார்களை நேரில் சென்று சந்து பார்த்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பின்னர், இந்துமதியின் மருத்துவ செலவிற்காக, தனது சொந்த பணம் ரூ 25 ஆயிரத்தை, அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். அப்போது அம்மா பேரவை துணை செயலாளர் குணசீலன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உதயம் எஸ்.ரமேஷ், மற்றும் குரும்மாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, குன்னம் மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!