பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், கட்சியினருடன் ஆலத்தூர் ஒன்றியத்தில் நன்றி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குறிச்சி, காரை, தெரணி, கொளக்காநத்தம், புதுக்குறிச்சி, வரகுபாடி, சிறுகன்பூர், திம்மூர், கொளத்தூர், சமத்துவபுரம், பாலம்பாடி, அருணகிரிமங்கலம், மலையப்ப நகர், சாத்தனூர், இலுப்பைக்குடி, மாக்காய்க்குளம், சில்லக்குடி, மேத்தால், அணைப்பாடி, அயினாபுரம், ச.குடிகாடு, நத்தக்காடு, தெற்குமாதவி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்த குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியதாவது:
குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உபட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இத்தொகுதிக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியின்போது ஒன்றியச் செயலர் என்.கே. கர்ணன், ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரா. வெண்ணிலா, முன்னாள் ஊராட்சித் தலைவர் செ. வீரமுத்து, குரும்பபாளையம் நாகராஜ் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.