பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் உள்ள முருகன்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் ஆர்.டி. இராமச்சந்த்திரன் பச்சையம்மன் நகர், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, முருக்கன்குடி,
நமையூர், பொன்னகரம், நல்லூர், மிளகாய்நத்தம், பெருமத்தூர், பெருமத்தூர் குடிக்காடு, வைத்தியநாதபுரம், கிளியூர், நன்னை, சாத்தந்தம், வ.அகரம், பழைய அரசமங்களம், கத்தாழைமேடு, வடக்களூர் உட்பட 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர், அனைத்து கிராமத்திலும் பொது மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
மேலும், தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.