பெரம்பலூர் : குன்னம் சட்ட மன்றத் தொகுதியின் மக்கள் நலச் கூட்டணி சார்பில் வேட்பாளராக ஆளூர். ஜெ. முகமது ஷா நவாஸ் தேர்வு செய்யப்ட்டு உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் அவர் இன்று லப்பைக்குடிக்காடு கிழக்கு பள்ளிவாசல் பகுதியில் கூட்டணி கட்யினருடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
மதியம் தொழுகை முடித்து பள்ளிவாசலில் இருந்து வெளிவந்த இஸ்லாமியர்களிடம் கூட்டணி கட்சியினருடன் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறியும் துண்டு அறிக்கைகளை வழங்கியும், வாக்காளர்களிடம் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடையும்படி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த தேமுதிக அவைத் தலைவர் கணபதி, லப்பைக்குடிக்காடு பேருர் செயலாளர் கமல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், விவசாய பிரிவு மாநிவ துணைத் தலைவர் வீர.செங்கோலன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை, லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர் அல்லிராஜா உட்பட கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.