kurumbalur Bharathidasan University College’s graduation ceremony

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 1,142 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் பட்டங்களை வழங்கினார்.

இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், உயிர் தொழில் நுட்பவியல், கணினி அறிவியல், எம்.சி.ஏ, கணிதம், நுண்ணுயிரியல், வணிகவியல், மேலாண்மையியல், சுற்றாலத் துறை, வரலாறு, சமூகப்பணிகள், கணினி அப்ளிககேஷன் உள்ளிட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.

2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இக்கல்லூரியில் பயின்ற மாணவ-மாணவிகள் 1,142 பேருக்கு இன்று பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, வணிகவியல், வரலாறு மற்றும் முதுகலை சமூக மேலாண்மையியல் ஆகிய 4 துறைகளைச் சேர்ந்த 7 மாணவிகள் பல்கலைக்கழக அளவிலான தர வரிசைப் பட்டியில் இடம் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்களையம், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ந.நராசாராமன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!