Kurumbalur Town Panchayat DMK Candidates introductory meeting; Minister Sivasankar attended!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சியில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 15 – தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், குரும்பலூர் தேர்தல் அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றியசெயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று குரும்பலூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்ற வேண்டும் என்று பேசினார். இதில் மாநில மருத்தவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், குரும்பலூர் பேரூர் முன்னாள் செயலாளர் ரமேஷ், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குமார், பீல்வாடி ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் களரம்பட்டி சதீஷ், மற்றும் வேட்பாளர்கள் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று, அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிக்ளின் வேட்பாளர் அறிமுக கூட்டமும் நடந்தது.