பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூரில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், தமிழ் திரைப்பட நடிகையுமான குஷ்பு குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் த.துரைராஜை ஆதரித்து திமுக வாக்களிக்க கோரி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் தொழில் ரீதியாகவோ, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை கிடையாது. 2006 ல் இருந்து 2011 வரை தமிழகத்தை கலைஞர் ஆளும் போது இந்தியாவில் தொழில் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. தற்போது மதுக்கடைகள், லஞ்சத்தில் முதன்மை மாநிலமாக இருக்கிறது எனவும், திமுகவின் தேர்தல் அறிக்கையை விளக்கியும் பேசினார். முன்னதாக பெரம்பலூரில் திமுக சார்பில் போட்டியிடும் சமூக சமத்துவப் படை நிறுவனர் ப.சிவகாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், வஷிஷ்டபுரம் முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.