Labor Day: The Bike Processoing of Perambalur District 2 Wheelers Mechanics || தொழிலாளர் தினம் : பெரம்பலூர் மாவட்ட டூ வீலர் மெக்கானிக்குகள் பைக் ஊர்வலம்
பெரம்பலூர் மாவட்ட இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் சார்பில் ஜமாலியா நகரில் மே தின கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் உசேன் பாபு தலைமை வகித்தார். பின்னர் ஆத்தூர் சாலையில் ஜமாலியா நகரில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். சங்க மூத்த ஆலோசகர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தது.
அங்கு காந்தி சிலைக்கு தொழிலாளர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ஊர்வலம் பெரியார் சிலைவழியாக சென்று வழியாக மீண்டும் ஆத்தூர் சாலையை அடைந்தது. இதில் சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர் விஸ்வநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகள் கலந்துகொண்டனர்.