Land dispute killer: Life sentence for young: Namakkal court
நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராசிபுரம் அருகே ஈஸ்வரமூர்த்திபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (வயது 43).அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மே 15-ம் தேதி முருகேசன், நிலத்தகராறு பிரச்சினை தொடர்பாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஈஸ்வரமூர்த்திபாளையத்தைச் சேர்ந்த அழகேசன் (வயது 29) என்பவரை ஆயில்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று வழக்கின் மீது தீரப்பளிக்கப்பட்டது.இதன்படி அழகேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்திரவிட்டார்