Last date extended for Class 10th individual candidates to get their mark sheet! Perambalur Collector Info!
பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித் தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும் செப்டம்பர் 2015 முதல் செப்டம்பர் 2021 வரையுள்ள பருவங்களுக்குரிய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் இருப்பில் உள்ளன.
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
எனவே, மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 31.08.2024-குள் பெரம்பலூர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலகப் பணி நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் அணுகியோ அல்லது ரூ.45/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம், தேர்வரின் தேர்வு கூட நுழைவுச்சீட்டு (HALL TICKET) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL MARK SHEET) நகல் இணைத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தனித்தேர்வர்களால் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள இதுவே இறுதி வாய்ப்பாகும், தவறினால் மேற்படி தேர்வுப் பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.