Law and order has deteriorated in the DMK regime to the extent that the bike is seized by the police: AIADMK General Secretary Edappadi K. Palaniswami’s speech in Perambalur!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்றிரவு அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

பெரம்பலூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திமுக ஆட்சியின் கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஏழை, எளிய பெண்களுக்காக அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

அதிமுக ஆட்சியில், இத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில், கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன் பெற்று வந்தனர். காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை திமுக அரசால் பொறுத்துக் கொள்ள முடியாமல், இத்திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள்.

எண்ணெய், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வேதனைடைந்து வருகின்றனர். மேலும், கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சென்னை ஆவடியில் போலீசாரிடம், ரவுடிகள் பைக்கை பிடுங்கி செல்லும் அளவிற்கு சீர் குலைந்து உள்ளது.

போதைப் பொருட்ள்ளின் புழக்கமும் அதிகமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்பொது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு ரூ. 1,000 கொடுக்கும் திட்டத்தைக் கூட நாங்கள் போராடிய பிறகு தான் கொடுத்தார்கள்.

அம்பானி, அதானி போன்ற தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் மத்திய அரசு ஏழை ,எளிய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். இதற்காக, இத்தொகுதி வேட்பாளர் சந்திரமோகன் போராடுவார். நாட்டில் அம்பானி அதானிக்கும் ஒரு ஓட்டுத்தான், சாதாரண மக்களுக்கும் ஒரு ஓட்டுத்தான்.

தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டணம், பால் உள்ளிட்ட அனைத்து வரியும் உயர்ந்துவிட்டது. கொரோனா காலத்தில் ரேஷன் கடை மூலமாக விலையில்லாப் பொருள்கள், பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்பு, பணம் உள்ளிட்டவற்றை பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுத்தோம். திமுக ஆட்சியில், இத் திட்டங்கள் எல்லாம் நிறுக்கப்பட்டு விட்டது. பெரம்பலூரைச் சேர்ந்த ஆ. ராசா, கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர். திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவர்கள். இதை மாற்ற அதிமுக வேட்பாளர் சந்திரமகனுக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் விஜிஎம் (எ) வெங்கடாசலம், உள்பட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!