Lawyers’ association fasts in Perambalur to condemn changing names of laws in Hindi!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதிமன்றங்களில் இந்தி திணிப்பை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மத்திய அரசு ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதை கண்டித்தும், மத்திய அரசு நீதிமன்றங்களில் ஹிந்தி திணிப்பை கண்டித்தும் பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூத்த வக்கீல். ஆர் . வாசுதேவன், மற்றும் பெரம்பலூர் பார் அசோசியன் துணைத் தலைவர் அண்ணாதுரை, இணைச் செயலாளர்கள் எழிலரசன், சிவராமன், வக்கீல்கள் பேரா. முருகையன் உள்ளிட்ட பிரபல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.