Lawyers boycott court in Perambalur demanding withdrawal of law amendment bills!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டம், தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்றது. அதில் மத்திய அரசாங்கம் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி மக்களுக்கு எதிராக திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் ஆகியவற்றின் பல சட்ட மசோதா நிறைவேற்றி உள்ளதால், அந்த மசோதாக்களை வாபஸ் பெற வலியறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இன்று சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் நமது சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில ஈடுட்பட்டனர்.