Lawyers boycott Perambalur district courts demanding temporary suspension of e-filing system!
பெரம்பலூர் பார் அசோசியன் கூட்டம் அதன் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையிலும், அட்வகேட்ஸ் அசோசியன் தலைவர் ஆர்.மணிவண்ணன் தலைமையிலும், அவசரக் கூட்டங்கள் நடந்தது.
அதில், கடந்த 01.09.2023 முதல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் MCOP, HMOP உள்ளிட்ட அனைத்து மனுக்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்காமலும், இந்த நடைமுறையில் உள்ள நிறை-குறைகள் குறித்து வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்காமலும், நீதிமன்றத்தில் இதற்கான முழுமையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காமலும், ஆன்லைன் E-filing-ஐ அவசரமாக நடைமுறைக்கு கொண்டுவருவதால் வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே. உரிய காலஅவகாசம் வழங்கி, இதன் நிறை- குறைகள் குறித்து வழக்கறிஞர்களிடம் கருத்து பெற்று, இதற்கான முழுமையான அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை Manual filing நடைமுறையே தொடர அனுமதிக்க வலியுறுத்தியும், அதுவரை E-filing நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க வலியுறுத்தியும் நாளை முதல் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து விலகியிருப்பது என தீர்மானங்கள் இரு சங்கங்களிலும் நிறைவேற்றப்பபட்டு , நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.