Lawyers protested in Perambalur demanding that the central government reverse the change of laws in Hindi!

நீதிமன்றங்களில் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரப்பன் தலைமையில் வழக்கறிஞர்கள் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மத்திய அரசு ஹிந்தியில் மாற்றியதை கண்டித்தும், மத்திய அரசு நீதிமன்றங்களில் ஹிந்தி திணிப்பை கண்டித்தும் பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தமிழ்நாடு -புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூரில் வழக்கறிஞர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். கையில் கருப்பு, பட்டையும் அணிந்திருந்தனர். அச்சங்கத்தின் ஆலோசகர் வக்கீல். ஆர் . வாசுதேவன், மற்றும் பெரம்பலூர் பார் அசோசியன் துணைத் தலைவர் அண்ணாதுரை, இணைச் செயலாளர்கள் எழிலரசன், சிவராமன், வக்கீல்கள் பேரா. முருகையன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!