Lecturer in Education for teacher training institutions to Job on July 15. Since the written examination are eligible to apply for the competition
ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு ஜுலை 15. முதல் விண்ணப்பிக்கலாம்
முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்ற விரிவுரையாளர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுகள் நடத்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆசிரியர் கல்வயியல் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை, இளம் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் போட்டி எழுத்துத் தேர்வு விண்ணப்பஙகள் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில ஜுலை 15 முதல் விநியோகம் செய்யப்படும்.
இப்போட்டி எழுத்து தேர்வு சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஜுலை 30 அன்று மாலை 5.00க்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்பப்படக்கூடாது. இப்போட்டி எழுத்து தேர்வு17.09.2016 அன்று நடைபெறும் என தொpவித்துள்ளார்.