Legal Aid and Awareness Camp for Employees of Perambalur Legal aid Commission
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியளர்களுக்கு பெரம்பலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.மலர்விழி வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு அவர் அப்பணியாளர்களிடையே குறைகளை கேட்டறிந்தவர், பல்வேறு சட்டங்களை எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும், இலவசமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பெறமுடியும், கிராமப்புற மக்கள் கல்வி வேலை வாய்ப்பு சுயதொழில் மூலம் தங்களை மேம்படுத்தி வறுமையை ஒழித்திட இது போன்ற முகாம்கள் நடத்தபடுவதாகவும், பொதுமக்கள் இது போன்ற முகாம்களில் கலந்து கொண்டு சட்ட அறிவினை பெற்று மேன்மை அடைந்திட வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.