Legal Aid and Awareness Camp on Protection of Women and Children: Held on behalf of the Legal Services Commission at Keelappuliyur

 

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். சுபாதேவி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் கீழப்புலியூரில் நடைபெற்றது.

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர். லதா தலைமை வகித்து பேசியதாவது:

பெண் குழந்தைகளை வளர்க்கும் போது மிகவும் கவனமுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எச்சூழலிலும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்ற உறுதிபாட்டை ஒவ்வொரு பெற்றோரும் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்திட போக்சோ சட்டம் மிகவும் கடுமையான தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்குகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் சட்ட அறிவினை பெற்று விழிப்புணர்வுடன் வளர மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இது போன்ற சட்ட விழிப்புணர்வு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு வழங்கினார். மேலும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கீழப்புலியூர் ஊராட்சித் தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றம் சட்ட தன்னார்வலர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!