Legal aid camp at Lebbaikudikadu near Perambalur
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில், லெப்பைக்குடிக்காடு மேற்கு ஹாபீ-ஆ பள்ளிவாசல் மற்றும் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் செயலர் மற்றும் சார்பு நீதிபதி எம். வினோதா தலைமை வகித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் சமுதாயத்தில் எவ்வாறு போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும், அவர்களை வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் விளக்கி பேசினார்.
மேலும், பெண்கள் அடிப்படை சட்டங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களது கைபேசி எண், தங்களது புகைப்படம் மற்றும் முகநூலை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் மார்பிங் போன்ற தொழில் நுட்பத்தில் அவர்களது அந்தரங்க விசயங்களை பூதகரமாக்கி விடுவார்கள்.
அவ்வாறு எதிரிகள் தங்களை மிரட்டும்போது, பெண்கள் தயங்காமல் சைபர் கிரைம் போலீசாரையோ, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அணுகினால் தக்க நடவழக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குபு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கீதா, விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜவஹர் அலி, முதல்வர் பவுல், வழக்கறிஞர்கள் ஆர்.சந்தான லட்சுமி, பி.வி.நர்மதா மற்றும் மேற்கு பள்ளி வாசல் நிர்வாக தலைவர் முனைவர் அப்தூர் ஜலீல், செயலர் அபுபக்கர், கிழக்கு பள்ளி வாசல் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் பெண்கள் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.