Legal Awareness Camp at Kolakkanatham Government School: Led by Judge Latha

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், செயலாளார்/சார்பு நீதிபதி ஆர்.லதா தலைமையில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அப்போது நீதிபதி ஆர்.லதா மாணவர்களிடம் பேசியதாவது:

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கல்வியினை எவ்வாறு பொறுப்புடன் கற்க வேண்டும் என்று முயற்சி எடுத்து விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்களோ, அதுபோல சட்டம் கற்பிக்கும் நல்வழிப்பாதையினை ஏற்று ஒழுக்கமுடன் வாழ்க்கையில் வாழ்வதற்கு அனைத்து சட்டங்களை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

வளரிளம் மற்றும் பதின்பருவ குழந்தைகள் தங்களது உடலையும், மனதையும் எந்நேரமும் ஆரோக்கியமுடன் வைத்துக்கொள்வதற்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கிடவும், நல்ல உணவு, நீர் ஆகியவற்றை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களை இச்சமூகத்தில் சிறந்த மனிதனாக உருமாற்றும் பணியினை ஏற்றிருக்கும் ஆசிரியர்களிடம் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களை மதித்தும் நடக்க வேண்டும்.

பள்ளியிலும், சமூகத்திலும் பாலின வேறுபாடுகளை களைந்து ஆண் பெண் என்ற பாகுபாடுகள் இல்லாமல் சமத்துவமான நிலையை மாணவர்கள் உணர்ந்து உள்வாங்க வேண்டும் என்று கூறினார். கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரின் முயற்சியால் குழந்தைகள் சரியான முறையில் உடலை பேணி காப்பதற்காக பள்ளியில் “தண்ணிக்கு மணி அடிக்கப்படுகிறது” என்றும் அந்த வேளையில் அனைவரும் கட்டாயம் நீர் அருந்த வேண்டும் என்ற முறையினை கடைபிடிப்பதை போல, வீடுகள், அலுவலகங்களில் பணிபுரிபுவர்கள் அனைவரும் சரியான அளவில் நீர் அருந்தி உடலை நல்ல முறையில் பாதுகாத்திட வேண்டும். நீதிபதி பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார், உதவி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் இராஜேந்திரன் நன்றி கூறினார். பள்ளியின் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!