Legal Awareness Camp for 100 Day Workers Program in Esanai Village
பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி. கருணாநிதி தலைமையில், எசனை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களிடையே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட நீதிபதி கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேன்மையடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளது என்றும், சட்ட அறிவினை அனைவரும் அறிந்து கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தெரிவித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் டி. வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.