Legal Awareness Camp for World Mental Health Day in Perambalur

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலா கருணை இல்லத்தில் உலக மனநல தினத்தையொட்டி சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மன நலப்பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக உலக மன நல தினம் அக்டோபர் 10ம்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூர் அருகே எறையசமுத்திரத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மலர்விழி தலைமை வகித்து பேசுகையில், மனநலம் குன்றியவர்களுக்காக சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில் அவர்களை பராமரிப்பது பற்றியும், அரசு, மருத்துவம் மற்றும் நீதி ஆகியவவைகளின் அவர்களுக்குண்டான சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், மனிதர்கள் எப்பொழுதெல்லாம் மனித நேயத்தை மறுக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களின் வயதான பெற்றோர்களும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும் வீதிகளில் வீசப்படும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். அதை களைய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில் மக்கள் நீதி மன்ற நீதிபதி கருணாநிதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வினோதா, குற்றவியல் கோர்ட் நீதிபதிகள் கருப்புசாமி, செந்தில்ராஜா, வக்கீல்கள் சுந்தரராஜன், சீனிவாசன், காமராஜ், துரைபெரியசாமி, செந்தில்நாதன், திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.

இதில் செஞ்சிலுவை சங்க கவுரவசெயலாளர் ஜெயராமன், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கீதா, சமூக நல மகளிர் நல அலுவலர் ஜெயந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் வரவேற்றார். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலவலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

இதே போல் துறைமங்கலம் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!