Legal awareness camp in all villages; Perambalur Legal Services Commission Information!
உங்கள் வாசல் தேடி சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு, நமது நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பவள விழா கொண்டாட்டமாகவும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆம் ஆண்டுகள் நிறைவடைதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டமாகவும் நடத்திடும் வகையில் 2021 அக்டோபர் 2 முதல் 2021 நவம்பர் 14வரை ( Pan-India Awareness ) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்திய குடியசுத் தலைவரின் தலைமையில், இந்தியாவின் தலைமை நீதியரசர், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்,உச்ச நீதிமன்ற நீதிபதி / தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், உச்ச நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவின் தலைவர் முன்னிலையில்Pan-India Awareness தொடக்க விழா 2021 அக்டோபர் 2 காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இது, யூடிப் மற்ற தொலைக்காட்சிகள் மற்றும் தூர்தர்ஷன் வழியாக நேரலையாக ஒலிப்பரப்பப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியினை நேரலையில் கண்டிட, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி ஹ. பல்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.