Legal awareness camp organized by Perambalur District Legal Aid Services Commission on the occasion of World AIDS Day!
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகும் இணைந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் முகாமிற்கு மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ். சந்திரசேகர் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது :
சட்ட பணிகள் ஆணைக்குழுவின் முதல் நோக்கமே சமூகத்திலும், பொருளாதாரத்திலும், சிகிச்சையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி அளிப்பதே நோக்கமாகும்.
குறிப்பாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசாங்கமும், மருத்துமனையும் முன்னுரிமை அளிக்கவேண்டும். அவ்வாறு உரிமைகள் மறுக்கபடும்பொழுது உடனடியாக சட்ட உதவி ஆணைக்குழுவினை அனுகினால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு நிர்வாகி தி.சுமதி மற்றும் சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் எஸ். சிராஜிதீன், வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற மக்கள் நீதிமன்ற கண்காணிப்பாளர் டி.வெள்ளைசாமி, பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் நோயாளிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநாத் மற்றும் நோயாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் 7 மனுக்கள் பெறப்பட்டது.