Legal Services Commission Celebration of Silver Year, Legal Justice for All: Perambalur Chief Justice Info!

பெரம்பலூர் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விடுக்கப்பட்டுள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பவள விழா கொண்டாட்டமாகவும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டமாகவும் “ ஆஜாதி கா அம்ரித் மகோசவ ” கொண்டாட்டம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் அனைவருக்குமான சட்ட நீதி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

சட்டத்தின் முன் அனைவரும் சமம் . அனைவருக்குமான நீதியை உறுதி செய்யும் பொருட்டு, பொதுமக்களாகிய உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் கட்டணமில்லா இலவச தீர்வு காணும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது . உங்களின் குடும்ப பிரச்சனைகள் தொடர்பாகவும் மனை பிரச்சனைகள் , கடன் பிரச்சனைகள் மற்றும் எவ்விதமான பிரச்சனைகள் தொடர்பாகவும் அணுகலாம். உங்களுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சேவை மனப்பான்மையுடன் செயலாற்றுகின்றனர்.

உங்களது மனுக்களை நீங்கள் நேரிலும் தபால் மூலமாகவும் வாய்மொழியாகவவோ , எழுத்து மூலமாகவோ கொடுக்கலாம் , தற்போது நீங்கள் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை . தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு கைப்பேசி மூலமாகவே மனுக்களை தாக்கல் செய்வதற்கு செயலியை உருவாக்கியுள்ளது . அந்த செயந NALSA Legal Services Mobile App “ நால்சா லீகல் சர்வீஸ் மொபைல் ஆப் ” என்பதாகும் . அந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்களாகிய நீங்கள் இருந்த இடத்திலிருந்தே கைப்பேசி மூலம் உங்கள் பிரச்சனைகள் பொருத்து மனு சமர்பிக்கலாம் .

அந்த மனுவின் பெயரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை நீங்கள் கைப்பேசியின் மூலம் கண்காணிக்கலாம் . மேலும் ஒரு குற்ற செயலால் பாதிக்கப்பட்ட அந்த நபர் பாதிப்பிற்கான இழப்பீட்டை இடைக்கால நிவாரணத் தொகையை பெறுவதற்கு இந்த செயலியின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

மேலும் இலவச சட்ட உதவி என்றால் என்ன அதனை பெறுவதற்கு தகுதி நிலை என்ன எவ்வகையான சட்ட பிரச்சனைகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி செய்கிறது என்ற விவரங்களையும் நீங்கள் கைப்பேசியின் மூலம் அறிந்து பயன்பெறலாம் .

மற்றவர்களும் பயன் அடையும் வகையில் நீங்கள் எடுத்துக் கூறலாம் . வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்திலிருந்து நவம்பர் 14 குழந்தைகள் தினம் வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து மக்களுக்கு சட்டப்பணிகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தெவித்துள்ளார் .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!