பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமம் நடுத்தெருவை சேர்த்தவர் பிரகாஷ், கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதிபா (18) கோவில் பாளையம் அருகில் உள்ள துங்கபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்து இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் பிரதீபாவின் தோழிகள் அதிக மதிப்பெண் பெற்று இருந்ததாகவும், பிரதிபா 790 மதிப்பெற்று தேர்ச்சி அடைந்ததாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தனது தோழிகளை விட பிரதீபா மதிப்பெண் குறைவாக பெற்றுவிட்டோம் என மனமுடைந்த காணப்பட்ட அவர் இன்று மாலை தனது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று உள் பக்கமாக தாழிட்டு கொண்டார். பின்னர், மேலே இருந்த இருப்பு பைப்பில் தனது சுடிதார் துப்பாட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து பிரதீபாவின் தயார் தேவகி குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீபா உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பெண் குறைவாக எடுத்தற்காக மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.