Let’s Walk Get Well Program; Collector launched in Perambalur!


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தினை சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நலன் கருதி நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் மூலம் 8 கிலோ மீட்டர் நடைபயிற்சி நிகழ்வினை கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி சியாமளாதேவி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவிலிருந்து தொடங்கி வைத்து மக்களோடு மக்களாக நடந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2023 – 2024 சட்டசபை அறிவிப்பு எண் 105 -ன்படி 8 கிலோமீட்டர் தூரம் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் திட்டத்தினை மாவட்டங்கள்தோறும் செயல்படுத்துவோம் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில், இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் அருகில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கம், கேந்திர வித்யாலயா பள்ளி-விளாமுத்தூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலக சாலை, பாலக்கரை வளைவு வழியாக, தேசிய நெடுஞ்சாலை வளைவு சென்று, முகாம் தொடங்கிய சிறுவர் பூங்காவிற்கே மீண்டும் வந்தடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது. இது 8 கிலோமீட்டர் தொலைவை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பொதுமக்களிடையே தினசரி நடைப்பயிற்சி பழக்கத்தினை ஊக்கபடுத்தி, நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களிடையே உடற்பயிற்சியின்மை, உணவு பழக்கவழக்க மாறுதல், உடல் உழைப்பு குறைவு ஆகியவை அதிகரித்துள்ளதால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் நோய், நீரழிவு நோய், இருதயநோய், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் மனஅழுத்தம் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவற்களிடம் காணப்பட்ட உயர் இரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 18 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்கள் 33 சதவிகிதம் அளவிற்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சிறுவயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கும் வந்தவர்களில் நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் நடைப்பயிற்சி இன்றியமையாதாகும்.

இது நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தனித்துவமான திட்டமாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை பருமன் சீராக பராமரிக்கப்படுகிறது, மேலும் அன்றையதினம் முழுவதும் உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.

அதுமட்டுமல்ல, நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தில் தினந்தோறும் நடையிற்சி மேற்கொள்வோருக்கும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மருத்துவ குழு மூலம் சிறப்பு தொற்றா நோய்க்கான பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு தகுந்த சுகாதார ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .

மேலும் இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதி, நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!